பிரபல நடிகை ராதிகா ஆப்தேவை திரையுலகில் இருந்து, தடைசெய்ய வேண்டுமென பலர் ஹேஷ்டேக் வெளியிட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில், ‘தோனி’, ‘கபாலி’, உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழ் மொழி படங்களில் சேலையை இழுத்து மூடி தேடி நடித்தாலும், பாலிவுட் திரையுலகில் படுமோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் இப்படிப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது புகைப்படங்களையோ வெளியிடவில்லை என்றாலும் இவரது பழைய மோசமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு தான் இவரை திரையுலகில் இருந்து தடை செய்ய வேண்டும் என பலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த மாதிரி படங்கள் தயாரித்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகி உள்ள நிலையில் அப்படி நடிக்கும் ராதிகா ஆப்தே மீதும் நடவடிக்கை எடுக்கும்படி #BoycottRadhikaApte என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். ராதிகா இந்திய கலாசாரத்துக்கு எதிராக செயல்படும் ராதிகா ஆப்தேவையும் ராஜ்கு...