பவியின் ஒவ்வொரு அசைவையும் நம்ம மீமர்கள், மீம்ஸாக்கி கலக்கி வருகின்றனர். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களில் அதிகமாக இடம்பெறுவது பவி டீச்சர் தான்.
இந்நிலையில், இவர் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவ் நடிப்பில் உருவாகும் “வேலன்” என்னும் படத்தில், முக்கிய கதாபாத்திரமாக பிரிகிடா நடிப்பதாக உறுதியாகியுள்ளது.
இணையத்தில் பல நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இவர் Make Up இல்லாமல் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள், “இப்படிலாம் காட்டினா பசங்களுக்கே வெக்கம் வரும்ங்க…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.