திருவனந்தபுரம்: "நான் குளிக்கும்போது, அந்த ஆன்ட்டி ரகசியமா வீடியோ எடுத்துட்டாங்க.. அந்த வீடியோவை காட்டி மிரட்டி.. என்னை லாட்ஜ்களுக்கு கூட்டிட்டு போய் பல பேருக்கு விருந்தாக்கினாங்க" என்று 17 வயது சிறுமியின் கண்ணீர் தகவல் கேரள மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.
மிரட்டல்
அதனால் பயந்துபோன பெற்றோர் மகளுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்து தந்தனர். அப்போதுதான் நிறைய பகீர் விஷயங்கள் வெளியே வந்தன. இந்த சிறுமி ஒருநாள் வீட்டில் குளித்து கொண்டிருந்தாராம்.. சொந்தக்கார பெண் ஒருவர், சிறுமி குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். இந்த ரகசிய வீடியோவை சிறுமிக்கு போட்டு காட்டி, சொன்னபடி கேட்காவிட்டால், குளிக்கும் வீடியோவை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவதாக மிரட்டி இருக்கிறார்.